/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரி பஸ் மோதி கணவன் கண் முன் மனைவி பரிதாப பலி
/
கல்லுாரி பஸ் மோதி கணவன் கண் முன் மனைவி பரிதாப பலி
ADDED : ஆக 21, 2024 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:பெருங்குடியைச் சேர்ந்த தயாளன் மனைவி தேவி, 44; தனியார் நிறுவன துாய்மை பணியாளர்.
கணவன், மனைவி இருவரும், இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், களவாய் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் சென்றனர்.
தாம்பரம் - முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்துார் பேருந்து நிறுத்தம், பின்னால் வந்த தனியார் கல்லுாரி பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், இருவரும் தடுமாறி விழுந்தனர். தேவி மீது பேருந்து ஏறி, இறங்கியதில், அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.