/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாய் பணி துவக்கம் நந்திவரத்திற்கு விமோசனம்
/
கால்வாய் பணி துவக்கம் நந்திவரத்திற்கு விமோசனம்
ADDED : ஜூலை 15, 2024 06:10 AM

கூடுவாஞ்சேரி : நந்திவரம், கிருஷ்ணாபுரம் இரண்டாவது தெருவில், கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக, அருகே உள்ள மலைமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, சிறிய தாங்கல் ஏரிக்கு மழைநீர் செல்கிறது.
இந்த கால்வாய், பல ஆண்டுகளுக்கு முன் குறுகலாக அமைக்கப்பட்டது. மேலும், அதிகளவிலான மழை பெய்யும் போது, கால்வாயில் சீராக செல்லாமல், தெருவில் வழிந்து வீடுகளுக்குள் செல்கிறது.
எனவே, இப்பகுதி வாசிகள் கால்வாயை அகலப்படுத்தி, மழைநீர் சீராக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிவுநீர் மற்றும் மழைநீர் சீராக செல்வதற்கான பராமரிப்பு பணி தற்போது துவங்கியது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.