ADDED : ஜூன் 25, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திறக்கப்படாத ஆதார் மையம் திருப்போரூரில் அவஸ்தை
திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. இதில், புதிய ஆதார் அட்டை பதிவு, முகவரி, பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றை மாற்ற, தினமும் ஏராளமானோர்வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 11:00 மணி வரை ஆதார் மையம் திறக்கப்பட வில்லை. இதனால், பொதுமக்கள் பலர்காத்திருந்து திரும்பி சென்றனர்.
அங்கு கேட்டதற்கு, வழக்கமாக வரும் பணி யாளர் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அலுவலகம் அருகே வந்து திரும்பி சென்று விட்டார். அதனால், வேறு இடத்திலிருந்து பணியாளர் வரவழைக்கப்படுகிறது என்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், முறையாகசரியான நேரத்தில் ஆதார் மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.திருநாவுகரசு, திருப்போரூர்.