/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் அலைக்கழிக்கப்படுவதாக புகார்
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் அலைக்கழிக்கப்படுவதாக புகார்
'மக்களுடன் முதல்வர்' முகாம் அலைக்கழிக்கப்படுவதாக புகார்
'மக்களுடன் முதல்வர்' முகாம் அலைக்கழிக்கப்படுவதாக புகார்
ADDED : ஆக 03, 2024 12:50 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த எடையூர், கடம்பாடி, வடகடம்பாடி, எச்சூர், குழிப்பாந்தண்டலம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம், எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடில் நேற்று நடந்தது.
மாமல்லபுரத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில், அணுசக்தி தொழில்வளாகத்தை ஒட்டி கொக்கிலமேடு உள்ளது. பிற ஊராட்சி பகுதியினர், மாமல்லபுரம் சென்று, அங்கிருந்தே கொக்கிலமேடு செல்ல வேண்டும்.
மாமல்லபுரத்திலிருந்து, அப்பகுதி செல்ல பேருந்து வசதியில்லை. மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் சென்று சிரமப்பட்டனர். கோரிக்கை மனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களின் ஜெராக்ஸ் எடுக்கவும் வசதி இல்லாததால், ஜெராக்ஸ் எடுக்க மீண்டும் மாமல்லபுரமே செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் பேருந்து வழித்தடத்தில் குழிப்பாந்தண்டலம், எச்சூர், வடகடம்பாடி பகுதிகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில், முகாமை நடத்தியிருக்கலாம். அனைத்து பகுதிக்கும் மைய இடமாகவும், பேருந்து வசதியுடனும் உள்ளன.
ஆனால், பேருந்து வசதி, ஜெராக்ஸ் எடுக்க கடை இல்லாத கொக்கிலமேடில், ஏன் முகாம் நடத்தப்பட்டது என தெரியவில்லை. மக்களை அலைகழிப்பதற்கு பெயர்தான், மக்களுடன் முதல்வர் முகாமா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.