/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கான்கிரீட் சாலை பணி மணப்பாக்கத்தில் துவக்கம்
/
கான்கிரீட் சாலை பணி மணப்பாக்கத்தில் துவக்கம்
ADDED : செப் 09, 2024 06:34 AM

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், மணப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், மணப்பாக்கம், உதயம்பாக்கம் ஆகிய பகுதிகளில், பல ஆண்டுகளாக சாலைகள் சீரழிந்த நிலையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இச்சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகத்திடம், அப்பகுதிவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானியத்தில், கான்கிரீட் சாலைகள் அமைக்க, 13.50 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்பின், கான்கிரீட் சாலை அமைக்க, டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் வாயிலாக, மேற்கண்ட பகுதிகளில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ”மணப்பாக்கம் ஊராட்சியில், கான்கிரீட் சாலை பணி துவங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும், ஒரு மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,” என்றார்.