/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்பக்கல்லுாரியில் சேர்க்கை இடங்களை குறைக்க பரிசீலனை?
/
சிற்பக்கல்லுாரியில் சேர்க்கை இடங்களை குறைக்க பரிசீலனை?
சிற்பக்கல்லுாரியில் சேர்க்கை இடங்களை குறைக்க பரிசீலனை?
சிற்பக்கல்லுாரியில் சேர்க்கை இடங்களை குறைக்க பரிசீலனை?
ADDED : ஜூன் 10, 2024 11:17 PM
மாமல்லபுரம் : அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், ஆசிரியர் பற்றாக்குறையால், இந்த ஆண்டுக்கான சேர்க்கை இடங்களை குறைப்பது குறித்து, பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக கலை, பண்பாட்டு துறையின்கீழ், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது.
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக் கலை - பி.டெக்., கவின்கலை இளநிலை மரபு சிற்பக்கலை - பி.எப்.ஏ., உள்ளிட்ட நான்காண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இப்படிப்புகளுக்கு சேர தகுதியானவர்கள்.
இதற்கு முன், கட்டடக் கலையில் 10, கற்சிற்பக் கலையில் 5, சுதை சிற்பக் கலையில் 15, மரச்சிற்பக் கலையில் 15, உலோக சிற்பக் கலையில் 5, ஓவியம், வண்ணக் கலையில் தலா 5 என, மொத்தம் 60 சேர்க்கை இடங்கள் இருந்தன.
அனைத்து கல்லுாரிகளிலும், சேர்க்கை இடங்களை 20 சதவீதம் உயர்த்தி, கடந்த 2022ல் அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி, இங்கு கட்டடக் கலையில் 20, கற்சிற்பக் கலையில் 15 என, சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டன.
கல்லுாரியில் பணியாற்றிய பெரும்பான்மையான ஆசிரியர்கள் ஓய்வுபெற்று விட்டனர். பல ஆண்டுகளாக, அந்த பணியிடங்கள் அனைத்தும் காலியாகவே உள்ளன.
நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், தற்காலிக ஆசிரியர்களாக சிலர் நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இச்சூழலில், கல்லுாரில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களையும், இதற்கு முன் இருந்த எண்ணிக்கைக்கு குறைப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகத்தினர் கூறும்போது, ”ஆசிரியர்கள் மிக குறைவாக உள்ளதால், சேர்க்கை இடங்களை குறைக்க, துறை தலைமையிடம் முறையிட்டுள்ளோம். அதுபற்றி உயரதிகாரிகள் முடிவெடுப்பர்,' என கூறினர்.