/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்.....
/
கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்.....
ADDED : ஜூன் 24, 2024 05:59 AM
சென்னை: சென்னை கொரட்டூரில், 'சாம் பவுண்டேஷன்ஸ்' என்ற நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், 2017ல் செயல்படுத்தப்பட்டது.
அதில் 79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்க, நாராயணசாமி என்பவர் முன்பதிவு செய்தார். 2018 வரை அவர், பல்வேறு தவணைகளில், 54 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளார்.
இதன்படி, முறையான ஒப்பந்தம் மற்றும் விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் கட்டுமான நிறுவனம் சரிவர செயல்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வீடு வாங்க செலுத்திய பணத்தை திருப்பி தர கோரியுள்ளார். இதற்கு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.
இது குறித்த நாராயணசாமியின் புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் வீடு வாங்க, 54 லட்சம் ரூபாய் செலுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதில், 21 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், மனுதாரர் செலுத்திய, 54 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயையும் அளிக்க வேண்டும்.
சட்டவிதிகளை மீறியதற்காக அந்நிறுவனத்துக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.