/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்ணிவாக்கம் ஏரியில் கட்டடம்? வண்டலுார் தாசில்தார் ஆய்வு
/
மண்ணிவாக்கம் ஏரியில் கட்டடம்? வண்டலுார் தாசில்தார் ஆய்வு
மண்ணிவாக்கம் ஏரியில் கட்டடம்? வண்டலுார் தாசில்தார் ஆய்வு
மண்ணிவாக்கம் ஏரியில் கட்டடம்? வண்டலுார் தாசில்தார் ஆய்வு
ADDED : மார் 15, 2025 01:57 AM

மண்ணிவாக்கம்:மண்ணிவாக்கம் ஊராட்சியில், ஏரி நிலத்தில் வீடு கட்டப்படுவதாக வந்த புகாரின்படி, வண்டலுார் தாசில்தார், அந்த இடத்தை நேற்று மாலை ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி 510.43 ஹெக்டேர் பரப்பில் உள்ளது.
இங்கு 12 வார்டுகள் உள்ளன. இதில், 9வது வார்டில் உள்ள பெரிய ஏரியின் இடத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, அந்த இடத்தை நேற்று மாலை 5:00 மணியளவில் ஆய்வு செய்தார். இதற்கு பகுதிவாசிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, 'ஏரி இடத்தில் வீடு கட்டப்படுகிறதா என்பது, நில அளவை செய்த பின்னரே தெரியவரும்' எனக் கூறி, அங்கிருந்து தாசில்தார் கிளம்பிச் சென்றார்.
இதுகுறிதது, பகுதிவாசிகள் கூறியதாவது:
மண்ணிவாக்கம் பெரிய ஏரி, சர்வே எண் 244ல், 70 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதை ஒட்டி, சர்வே எண் 246ல், 6.5 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்தது. கடந்த 20 ஆண்டிற்கு முன், 6.5 ஏக்கர் இடத்தையும் தனியார் கட்டுமான நிறுவனம் வாங்கியது.
பின், சி.எம்.டி.ஏ., நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று, மொத்தமுள்ள 6.5 ஏக்கர் இடத்தையும் வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றி, விற்பனை செய்ய துவங்கியது.
அதன்படி, 100க்கும் மேற்பட்டோர் இங்கு இடம் வாங்கி, தற்போது, 30க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த 6.5 ஏக்கர் இடத்தில், பூர்விக விவசாயிகளுக்கு சில வீட்டு மனைப் பிரிவுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அந்த இடத்தில், விவசாயி ஒருவர் தற்போது சொந்தமாக வீடு கட்டுகிறார்.
ஆனால், அந்த நபர் மீது பொறாமை கொண்ட நபர்கள், ஏரி நிலத்தில் வீடு கட்டப்படுவதாக, பொதுப்பணித் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
புகாரின்படி, தாசில்தார் நேரில் வந்து ஆய்வு செய்து, நிலத்தை அளவீடு செய்யும்படி, நில அளவை ஊழியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.