/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பஸ் நிலைய கட்டுமானம் அடித்தள 'பைலிங்' பணிகள் தீவிரம்
/
மாமல்லை பஸ் நிலைய கட்டுமானம் அடித்தள 'பைலிங்' பணிகள் தீவிரம்
மாமல்லை பஸ் நிலைய கட்டுமானம் அடித்தள 'பைலிங்' பணிகள் தீவிரம்
மாமல்லை பஸ் நிலைய கட்டுமானம் அடித்தள 'பைலிங்' பணிகள் தீவிரம்
ADDED : ஆக 23, 2024 11:43 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண உள்நாடு, சர்வதேச பயணியர் வருகின்றனர். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இத்தகைய பகுதியில், நீண்டகாலமாக சரியான பேருந்து நிலைய வசதி இல்லை. ஸ்தலசயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்தவெளி பகுதியில், கடும் இடநெருக்கடியில் பேருந்து நிலையம் இயங்குகிறது.
கடந்த 1992ல், திருக்கழுக்குன்றம் - புதுச்சேரி சாலை இடையே பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவெடுத்தும், அரசியல் தலையீடுகளால் கிடப்பில் போடப்பட்டது.
இச்சூழலில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், 90.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையத்தை, 6.80 ஏக்கர் பரப்பில் அமைக்கிறது. பேருந்து நிலையத்தின் கீழ் பகுதியில் வாகன நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நிறுத்தும் வசதி, பயணியர் காத்திருப்பு கூடம், வர்த்தக கடைகள் உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்., 27ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், மார்ச் 13ம் தேதி, பூமி பூஜையுடன் பணிகளை துவக்கினார்.
தனியார் ஒப்பந்த நிறுவனம், பணிகளை துவக்கிய நிலையில், பின் பணிகள் நடக்கவில்லை. லோக்சபா தேர்தல் கருதி, அவசரகதியில் அடிக்கல் நாட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்தலுக்கு பின், முதல்கட்டமாக, கான்கிரீட் கலவை தயாரிப்பு பிளான்ட் அமைக்கப்பட்டது. நிலத்தடியில் 'பைலிங்' அமைக்க தேவையான, இரும்பு உருளைகள் தயாரிப்பும் துவக்கப்பட்டது. தற்போது ராட்சத இயந்திரங்கள் வாயிலாக, 'பைலிங்' அமைக்கும் பணிகள், தீவிரமாக நடக்கிறது.

