/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.8 லட்சத்தில் செங்காட்டூரில் நெற்களம் அமைக்கும் பணி
/
ரூ.8 லட்சத்தில் செங்காட்டூரில் நெற்களம் அமைக்கும் பணி
ரூ.8 லட்சத்தில் செங்காட்டூரில் நெற்களம் அமைக்கும் பணி
ரூ.8 லட்சத்தில் செங்காட்டூரில் நெற்களம் அமைக்கும் பணி
ADDED : ஆக 18, 2024 12:46 AM

செய்யூர்:செய்யூர் அருகே செங்காட்டூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயமே, இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், அதிக அளவில் நெல் பயிரிடப்படுகின்றது.
அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்த நெற்களம் இல்லாததால், பல ஆண்டுகளாக விவசாயிகள், தங்களது நெல்லை சாலையில் உலர்த்தி வருகின்றனர்.
ஆகையால், செங்காட்டூர் ஊராட்சியில் நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவமனை அருகே, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 289 சதுர மீட்டர் அளவில், புதிதாக நெல் உலர்த்தும் களம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
கட்டுமானப்பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் நெற்களம் விவசாயிகள் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.