/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டர் ஆபீஸ் முன் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்
/
செங்கை கலெக்டர் ஆபீஸ் முன் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்
செங்கை கலெக்டர் ஆபீஸ் முன் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்
செங்கை கலெக்டர் ஆபீஸ் முன் நிழற்குடை கட்டும் பணி துவக்கம்
ADDED : ஆக 09, 2024 10:32 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடிவேண்பாக்கம் பகுதியில், கலெக்டர் அலுவலகம் உள்ளது. அதே வளாகத்தில் மாவட்ட காவல் அலுவலகம், வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, கல்வி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு, பல்வேறு தேவைகளுக்காக, தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால், பயணியர் வசதிக்காக, கலெக்டர் அலுவலகம் அருகில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையின் இருபுறமும், பயணியர் நிழற்குடை கட்ட வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், 2023- - 24 சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பயணியர் நிழற்குடை கட்ட, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கடந்த ஆண்டு டிச., மாதம், கலெக்டரிடம் வழங்கினார்.
இந்நிதியை செயல்படுத்த, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இப்பணிக்கு, கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததார் வாயிலாக, பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு கூறியதாவது:
கலெக்டர் அலுவலகம் பகுதியில், பயணியர் நிழற்குடைகள் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. மூன்று மாதங்களில் பணிகள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.