/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமயிலுார் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு
/
சிறுமயிலுார் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு
சிறுமயிலுார் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு
சிறுமயிலுார் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு
ADDED : மே 28, 2024 06:33 AM

சித்தாமூர், சித்தாமூர் அருகே உள்ள சிறுமயிலுார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 90 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளி அருகே வயல்வெளிப்பகுதி இருப்பதால், சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழலில் மாணவர்கள் படித்து வந்தனர்.
பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க, மாணவர்களின் பெற்றோர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின், கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது பள்ளி சுற்றுச்சுவர் முழுதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.