/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் கழிப்பறை கட்டும் பணி தீவிரம்
/
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் கழிப்பறை கட்டும் பணி தீவிரம்
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் கழிப்பறை கட்டும் பணி தீவிரம்
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் கழிப்பறை கட்டும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 04, 2024 12:33 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பரனுார் கிராமத்தில், சுங்கச் சாவடி உள்ளது. இதன் வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், பயணியர் வசதிக்காக, கழிப்பறை கட்ட வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து, தென்மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் சாலை யில், சுங்கச்சாவடி அருகில்ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை கட்ட, 52 லட்சம் ரூபாய் நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கியது.
இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள், அனைத்து பணிகளும்நிறைவு பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கூறினார்.