/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் தடை, போதை பொருட்கள் ஒழிப்பு கூடுவாஞ்சேரியில் ஆலோசனை கூட்டம்
/
மின் தடை, போதை பொருட்கள் ஒழிப்பு கூடுவாஞ்சேரியில் ஆலோசனை கூட்டம்
மின் தடை, போதை பொருட்கள் ஒழிப்பு கூடுவாஞ்சேரியில் ஆலோசனை கூட்டம்
மின் தடை, போதை பொருட்கள் ஒழிப்பு கூடுவாஞ்சேரியில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 27, 2024 12:08 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் புஷ்பலதா தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி களில் தொடரும் மின்தடை, போதைப்பொருள் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதில், அப்பகுதிவாசிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள்பங்கேற்றனர்.
தொடர்ந்து, தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறுகிராம பகுதிகளில், சட்ட விரோதமான செயல்களான மதுபாட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது மற்றும் குட்கா பொருட்கள், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
போதைப்பொருள் விற்பனை செய்வோர் குறித்து, அப்பகுதிவாசிகள் உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் தாசில்தார் புஷ்பலதாகூறியதாவது:
வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தொடர் மின்வெட்டால் இப்பகுதிவாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரியஅதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
மின்தடை ஏற்படாத வகையில், சீரான மின் வினியோகம் வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர்.
மேலும், கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு தொடர்பாக, தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணித்து, விற்பனையில் ஈடுபடுவோர் மீதும், பதுக்கி வைப்போர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கூறினார்.