/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சை யு - டியூப் சேனல் மீது புகார்
/
காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சை யு - டியூப் சேனல் மீது புகார்
காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சை யு - டியூப் சேனல் மீது புகார்
காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சை யு - டியூப் சேனல் மீது புகார்
ADDED : ஆக 05, 2024 12:35 AM

கூடுவாஞ்சேரி:தமிழக நாடார் சங்க மாநில தலைவர் முத்துரமேஷ், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பீட்டர், ஊரப்பாக்கம் நாடார் சங்க தலைவர் வைகுண்டராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜிடம் புகார் மனு வழங்கினர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஊரப்பாக்கத்தில் வசிக்கும் பாண்டியன் என்பவர், ஐந்தாம் தமிழர் சங்கம் என்ற பெயரில், யு - டியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில், காமராஜர் ஒரு நாயுடு தான்; நாடார் அல்ல என்ற தலைப்பில், காமராஜரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், நாடார் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் பதிவிட்டுள்ளார்.
இது, சமுதாய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, காமராஜர் பெயருக்கும், நாடார் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும்விதமாக பதிவிட்ட அவரை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர் ஜெயராஜ், யு - டியூப் சேனலில் பதிவிடப்பட்ட பதிவை பார்வையிட்டு, ஆய்வுக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளார்.