/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 15, 2025 01:55 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 26 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு மண்டல அளவில் பணி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் தலைமையில், செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 26 மனுக்கள் அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல இணை பதிவாளர் தெரிவித்தார். இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் வேணுகோபால், வேலு, துணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் மகேந்திர பாபு, தசரதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.