/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்
/
தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்
ADDED : ஆக 28, 2024 01:11 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வணிகர்கள், தொழில் புரிவோர், கட்டாயம் தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பெற்றுள்ள உரிமத்தை புதுபித்துக்கொள்ள வேண்டும்.
புதிதாக தொழில் செய்வோர் மற்றும் இதுவரை உரிமம் பெறாதவர்கள், தொழில் உரிமம் பெறுவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, அதற்கான கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை வணிகர்கள், தொழில்புரிவோர் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளவும், உரிமம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.