/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சண்முகம் சாலையில் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
/
சண்முகம் சாலையில் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
சண்முகம் சாலையில் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
சண்முகம் சாலையில் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
ADDED : மார் 02, 2025 11:27 PM
தாம்பரம், தி.நகர்., புரசைவாக்கம் போல், அதிக மக்கள் நடமாட்டம் கொண்டது, மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை.
இதை ஒட்டி, வணிக நிறுவனங்கள், ஹோட்டல், துணிக்கடை, நகைக்கடை என, ஏகப்பட்ட கடைகள் உள்ளன. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், இச்சாலையில் மூச்சு முட்டும் அளவிற்கு நெரிசல் காணப்படும்.
அதே நேரத்தில், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, சிறுகடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், நடந்து செல்லும் மக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள்அவ்வப்போது, பெயருக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், சில நாட்கள் கழித்து, மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்வதும் வாடிக்கையாகி விட்டது.
தற்போது, இது அதிகரித்து, சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது.
அதனால், மாநகராட்சி அதிகாரிகள் பெயருக்காக இல்லாமல், முழுதுமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமமின்றி சென்றுவர வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.