/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சுகாதார பணிகள் மந்தம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
செங்கையில் சுகாதார பணிகள் மந்தம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
செங்கையில் சுகாதார பணிகள் மந்தம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
செங்கையில் சுகாதார பணிகள் மந்தம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 11, 2024 12:37 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியின் சாதாரண கூட்டம், நகரமன்ற தலைவர் தேன்மொழி தலைமையில், நேற்று நடந்தது. ஆணையர் ஆண்டவர் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
ரமேஷ் - தி.மு.க.: வேதாசலம் நகரில் அரசுமற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
சாலையில் நாய், கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், மதுராந்தகம் நகராட்சிகளில், நாய்களை பிடித்து கருத்தடை செய்கின்றனர். அதேபோல், நகராட்சியிலும் செயல்படுத்தவேண்டும்.
சுகாதார அலுவலர்: நாய்களுக்கு கருத்தடை செய்ய, மற்ற நகராட்சிகளிடம் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். பிரபுவேல் - தி.மு.க.: செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் பள்ளிகள் உள்ளன. இப்பகுதிகளில், காலை 8:00 - 9:30 மணி வரையும், மாலை 4:30 - 5:30 மணி வரையும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
புலிப்பாக்கம் பகுதி யில் விபத்து நடைபெறுவதாகக் கூறி, சாலை மூடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும், இதே சாலையில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புலிப்பாக்கம் பகுதியில், பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்தி, வழக்கம்போல், சென்னை செல்லும் வாகனங்கள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.