/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூரியர் நிறுவனத்தில் கேமரா திருடிய ஊழியருக்கு வலை
/
கூரியர் நிறுவனத்தில் கேமரா திருடிய ஊழியருக்கு வலை
ADDED : ஆக 04, 2024 09:42 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியில், தனியார் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம், வாடிக்கையாளருக்கு வந்த 40,000 ரூபாய் மதிப்புள்ள கெனான் கேமரா அலுவலகத்தில் இருந்து மாயமானது.
இது குறித்து, கூரியர் நிறுவனத்தின் மேனஜர் தினேஷ்குமார், 29, என்பவர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அலுவலகத்தில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், இதே நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்து வரும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சிவபிரகாசம் என்ற இளைஞர், கேமராவை திருடியதை கண்டுபிடித்தனர். சிவபிரகாசத்தை போலீசார் தேடி வருகின்றனர்.