/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் மார்ச் 16 வரை கைவினை கண்காட்சி
/
மாமல்லையில் மார்ச் 16 வரை கைவினை கண்காட்சி
ADDED : மார் 10, 2025 11:36 PM
மாமல்லபுரம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின்கீழ், பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகம் இயங்குகிறது.
இதே வளாகத்தில், தமிழக, பிற மாநில கைவினைக் கலைஞர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, இடைத்தரகர் இல்லாமல், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்க, 'அர்பன் ஹாட்' எனப்படும், நகர்ப்புற சந்தை திடல் அமைந்துள்ளது.
இங்குள்ள கடைகளில், கைவினைப் பொருட்கள் விற்க, மாவட்ட அளவில் 'காந்தி ஷில்ப் பஜார்' கண்காட்சியை, மத்திய கைவினை வளர்ச்சி வாரிய உதவி இயக்குநர் கேதரின் ஜோஸ், நேற்று துவக்கி வைத்தார். பூம்புகார் கிளை மேலாளர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சி, வரும் 16ம் தேதி, தினசரி காலை 10:00 - இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
தமிழக பாரம்பரிய பஞ்சலோக சிலைகள், கற்சிலைகள், சுடுமண் சிலைகள், நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கலைநய ஆபரணங்கள், கைத்தறி துணிகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.