/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கைவினை கலைஞர்கள் ஆவணி அவிட்ட பூணுால் தரிப்பு
/
மாமல்லை கைவினை கலைஞர்கள் ஆவணி அவிட்ட பூணுால் தரிப்பு
மாமல்லை கைவினை கலைஞர்கள் ஆவணி அவிட்ட பூணுால் தரிப்பு
மாமல்லை கைவினை கலைஞர்கள் ஆவணி அவிட்ட பூணுால் தரிப்பு
ADDED : ஆக 20, 2024 05:36 AM

மாமல்லபுரம் : விஸ்வகர்மா சமூகத்தினர், கைவினை சார்ந்த ஐந்து வகை தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சமுதாய ஆண்கள், பாரம்பரிய நடைமுறையாக பூணுால் தரிப்பது வழக்கம். ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திர நாளில், புதிதாக பூணுால் தரிப்பர்.
ஆவணி அவிட்ட நட்சத்திர நாளான நேற்று, மல்லை விஸ்வகர்மா ஜன நல சங்கத்தினர், இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையில், 15ம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விக்னேஸ்வரர், கலசம், கணபதி ஆகிய பூஜைகள், காயத்ரி, விஸ்வகர்மா ஆகிய ஹோமங்கள் நடத்தி வழிபட்டனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்கள், பழைய பூணுாலை அகற்றி, புதிதாக தரித்தனர்.
ஜோதிடர் வித்யாதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆவணி அவிட்ட நட்சத்திர நாளின் சிறப்பு, காயத்ரி மந்திர உச்சரிப்பால் ஏற்படும் உடல்நல நன்மைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி, அவற்றை கடைப்பிடிக்குமாறு கூறினார். சங்க தலைவர் சண்முகம், செயலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.