sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

/

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூலை 07, 2024 10:50 PM

Google News

ADDED : ஜூலை 07, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : சிறுபான்மையினர் தொழில், கல்வி உள்ளிட்டவற்றுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில், கைவினை தொழில், கல்வி ஆகியவற்றுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபர் கடன், ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகித்தில், 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ - மாணவியருக்கு, 20 லட்சம் ரூபாய் வரை, 3 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், இக்கடனுதவியை பெற, விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us