/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியால் தலையில் வெட்டி முதியவரிடம் பணம் பறிப்பு
/
கத்தியால் தலையில் வெட்டி முதியவரிடம் பணம் பறிப்பு
ADDED : மே 23, 2024 12:39 AM
மறைமலை நகர்:துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ரூபன், 53. இவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில், பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல ரூபன் கடையில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
ரூபன் பணம் தர மறுக்கவே, கத்தியால் தலை மற்றும் இடது காதில் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த, 3,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் ரூபனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு தலையில் 20 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மறைமலை நகர் போலீசார், ரூபன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

