/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்மாற்றி கம்பங்கள் சேதம் மணப்பாக்கத்தில் ஆபத்து
/
மின்மாற்றி கம்பங்கள் சேதம் மணப்பாக்கத்தில் ஆபத்து
ADDED : ஜூலை 22, 2024 06:58 AM

சூணாம்பேடு: சூணாம்பேடு அருகே மணப்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சூணாம்பேடு- - தொழுப்பேடு செல்லும் சாலையோரம், விநாயகர் கோவில் எதிரே, உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, வயல்வெளியில் உள்ள விவசாய மின் மோட்டார்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்த மின் மாற்றியை தாங்கிப் பிடிக்கும் மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்து உள்ளன. பலத்த காற்று வீசினால், மின் மாற்றி எப்போது வேண்டுமானாலும் சாலையில் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், சேதமடைந்த நிலையில் சாலையோரம் இருக்கும் மின்மாற்றியின் கம்பங்களை மாற்றி அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.