/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மணல் குவியலால் அபாயம்
/
நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மணல் குவியலால் அபாயம்
ADDED : மார் 14, 2025 01:03 AM

மறைமலைநகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் செங்கல்பட்டில், ஜி.எஸ்.டி., சாலை -- காஞ்சிபுரம் சாலை இடையே நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் இருபுறமும் மணல் திட்டுகள் மற்றும் குப்பை நிறைந்து உள்ளது.
இவை வாகனங்கள் செல்லும் போது காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
மேலும், மணல் குவியலில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இவற்றை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.