ADDED : ஜூலை 13, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் சிறுசேரி சாலை, தாழம்பூர் சாலை, வண்டலுார்- - கேளம்பாக்கம் சாலை செல்கிறது. பிரதான சாலை மற்றும் மின்கம்பங்கள் என, வாகன ஓட்டிகளைகவரும் வகையில், பிரமாண்டமாக விளம்பரபதாகைகள் அமைக்கப்பட்டு வருவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மழை காலத்தில் சரிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. இதுதொடர்பாக, அப்பகுதி வாசிகள் திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.