/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் உலவும் மாடுகளால் மாமல்லையில் விபத்து அபாயம்
/
சாலையில் உலவும் மாடுகளால் மாமல்லையில் விபத்து அபாயம்
சாலையில் உலவும் மாடுகளால் மாமல்லையில் விபத்து அபாயம்
சாலையில் உலவும் மாடுகளால் மாமல்லையில் விபத்து அபாயம்
ADDED : செப் 08, 2024 12:21 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில், விவசாயிகள் பால் கறவை மாடுகள், இறைச்சி தேவைக்கு ஆடுகள் ஆகியவை வளர்க்கின்றனர். முன்பெல்லாம், வயல்வெளியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படும். தொழுவத்தில் அடைத்து பராமரிப்பர். தற்போது, தொழுவத்தில் அடைப்பது இல்லை.
பெரும்பாலான மாடுகள், பொதுவெளியில் மேய விடப்படுகின்றன. அவை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உலா வருகின்றன.
அவ்வாறு சாலைகளில் உலா வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சுற்றுலா பயணியருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இங்குள்ள போலீஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதங்கள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் கும்பலாக படையெடுக்கின்றன.
மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால், உள்ளாட்சி நிர்வாகம், உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்குமாறு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு, பெயரளவிற்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில், மாடுகள் அதிகம் படையெடுத்து, வாகனங்கள் செல்ல இயலாமல் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாடுகள் உலா வருவதை தடுக்க, அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.