/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் நிலைய பாதையில் இருள்; சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
/
ரயில் நிலைய பாதையில் இருள்; சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
ரயில் நிலைய பாதையில் இருள்; சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
ரயில் நிலைய பாதையில் இருள்; சிங்கபெருமாள்கோவிலில் அச்சம்
ADDED : ஆக 27, 2024 01:05 AM
மறைமலை நகர் : செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் நிலையம் இடையே, தினமும் 30க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலையம் அருகே, சிங்கபெருமாள் கோவில்- - திருவள்ளூர் சாலையில், ரயில்வே கேட் அருகில் உள்ள சாலை வழியாக நடந்து, ரயில் நிலையம் செல்கின்றனர்.
இந்த பகுதியில் விளக்குகள் ஏதும் இல்லாததால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர், அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இது குறித்து, ரயில் பயணி கோமதி என்பவர் கூறியதாவது:
இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்திற்கு சென்று வருகின்றனர். ரயில் நிலையத்திற்கும், ரயில் கேட்டிற்கும் இடைப்பட்ட 200 மீட்டர் துாரம், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த பகுதியை தனியாக கடக்க மிகவும் அச்சமாக உள்ளது. சக பயணியர் வரும் வரை காத்திருந்து, கடக்கும் சூழ்நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன், தனியாக சென்ற பெண்ணிடம் மது போதையில் இருந்த நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார். அதன் பின்னும் இங்கு விளக்குகள் அமைக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பெண் பயணியர் பாதுகாப்பிற்காக, இந்த பகுதியில் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

