/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டார்லிங் புதிய ஷோரூம் செங்கையில் திறப்பு
/
டார்லிங் புதிய ஷோரூம் செங்கையில் திறப்பு
ADDED : ஜூலை 22, 2024 02:25 AM

செங்கல்பட்டு:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வரும் 'டார்லிங்' நிறுவனத்தின் 141வது புதிய கிளை, செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில், நேற்று திறக்கப்பட்டது.
தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், டார்லிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான வெங்கடசுப்பு, புதிய கடையை திறந்து வைத்தார்.
அவர் கூறியதாவது:
ஒரு காபி வாங்கும் விலையை கொடுத்தால் போதும், எங்கள் கிளையில், தவணை முறையில் விலை உயர்ந்த 'ஏசி' உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்லாம். சேவையிலும், தரத்திலும், டார்லிங் முதலிடத்தில் உள்ளது. அதுவே எங்களது தனித்தன்மை.
இவ்வாறு வெங்கடசுப்பு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு வியாபாரிகள் சங்க தலைவர் உத்திரகுமார், செயலர் துரைராஜ் மற்றும் டார்லிங் ஷோரூம் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.