/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு வரும் டிச., வரை கால அவகாசம்
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு வரும் டிச., வரை கால அவகாசம்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு வரும் டிச., வரை கால அவகாசம்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு வரும் டிச., வரை கால அவகாசம்
ADDED : ஜூலை 09, 2024 06:14 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பிறப்பு சான்றி தழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய, வரும் டிச., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு, இறப்புபதிவுச்சட்டம் - 1969வழிவகை செய்கிறது.
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்பு சான்றிதழ்,பள்ளியில் சேர்க்கை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம்,பாஸ்போர்ட், விசாஉரிமம், அயல்நாட்டில் குடியுரிமை உள்ளிட்டவற்றிற்கு ஆவணமாகஉள்ளது.
இந்திய தலைமை பிறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, ஜனவரி 1, 2000த்துக்கு 15 ஆண்டு களுக்கு முன் பிறந்தவர்கள், வரும் டிச., 31ம் தேதி வரை, பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய, காலவரையறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நகராட்சி ஆணையர், வட்டாட்சியர்,பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம், பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக் கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.