/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக சமுதாய கூடம் மேலமையூரில் கட்ட முடிவு
/
புதிதாக சமுதாய கூடம் மேலமையூரில் கட்ட முடிவு
ADDED : ஆக 22, 2024 06:40 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளன.
இதனால், ஊராட்சி பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பின், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி 2023- - 24ம் ஆண்டு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், சமுதாய கூடம் கட்ட 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்த டிச., மாதம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இப்பணியை செயல்படுத்த ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். ஆனால், பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. இப்பணியை விரைந்து துவக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு கூறியதாவது:
மேலமையூர் ஊராட்சியில், சமுதாய கூடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்தார். கூடுதலாக 26 லட்சம் ரூபாய் நிதி கேட்டுள்ளோம். இப்பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.