/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 8 ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடம் கட்ட முடிவு
/
செங்கையில் 8 ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடம் கட்ட முடிவு
செங்கையில் 8 ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடம் கட்ட முடிவு
செங்கையில் 8 ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடம் கட்ட முடிவு
ADDED : ஆக 20, 2024 01:29 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
பல்வேறு ஊராட்சிகளில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சேதமடைந்த கட்டடத்தில், ஊராட்சி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பல ஊராட்சிகளில் கிராம வேவை மையம், பள்ளி கட்டடம், இ- - சேவை மையங்களில், ஊராட்சி அலுவலகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.
அதனால், ஊராட்சிகளில் கூட்டங்கள் நடத்தவும், சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இடவசதி இல்லாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், கழிப்பறை வசதி இல்லாமல், சேவை பெற வரும் அப்பகுதிவாசிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிரமப்படுகின்றனர்.
ஆகையால், புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணையம் நிதியின் கீழ், தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், எட்டு ஊராட்சிகளுக்கு புதிதாக அலுவலக கட்டடம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பணி ஆணைகள் வழங்கி, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -