/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கடற்கரை மண் பாதையில் சிமென்ட் கல் சாலை அமைக்க முடிவு
/
மாமல்லை கடற்கரை மண் பாதையில் சிமென்ட் கல் சாலை அமைக்க முடிவு
மாமல்லை கடற்கரை மண் பாதையில் சிமென்ட் கல் சாலை அமைக்க முடிவு
மாமல்லை கடற்கரை மண் பாதையில் சிமென்ட் கல் சாலை அமைக்க முடிவு
ADDED : ஜூலை 23, 2024 01:25 AM
மாமல்லபுரம், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் செயல்படுத்தப்படும் ஆரோக்கிய, சுகாதார உணவு வீதி திட்டத்தில், 24.25 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் எனும் சிமென்ட் கல் சாலை, மழைநீர் வடிகால்வாய் அமைக்க, தனியாரிடம் பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் அளித்துள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளை, ஆரோக்கிய, சுகாதார தரத்தில் வழங்க கருதி, மத்திய சுகாதார அமைச்சகம், மாவட்டத்தில் ஒரு சுற்றுலா இடம் என, நாடு முழுவதும் 100 இடங்களில், சிறப்பு திட்டம் செயல்படுத்த முடிவெடுத்தது.
இதுகுறித்து, இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசித்தது.
தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், திட்டத்தை செயல்படுத்த, தலா ஒரு கோடி ரூபாய் அளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லவர் சிற்பங்களுக்கு புகழ்பெற்ற சுற்றுலா இடமான மாமல்லபுரத்தில், இத்திட்டத்தை செயல்படுத்த, உணவு பாதுகாப்புத்துறை முடிவெடுத்தது.
கடற்கரை கோவில் அருகில், 50 சிற்றுண்டி உணவகங்கள், சுத்திகரிப்பு குடிநீர், பாதை, அமரும் இருக்கைகள், சூரிய ஒளி சக்தி விளக்குகள், கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு, முதல்கட்ட நிதியாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடற்கரை செல்லும் மண் பாதையின் ஒரு பகுதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மற்றொரு பகுதியில் 9.25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சிமென்ட் கல் சாலை மற்றும் வடிகால்வாய் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்தம் அளித்துள்ளது.