/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் ஆலை கல்வெட்டிற்கு அலங்கார துாண்கள் அமைப்பு
/
குடிநீர் ஆலை கல்வெட்டிற்கு அலங்கார துாண்கள் அமைப்பு
குடிநீர் ஆலை கல்வெட்டிற்கு அலங்கார துாண்கள் அமைப்பு
குடிநீர் ஆலை கல்வெட்டிற்கு அலங்கார துாண்கள் அமைப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:07 AM

மாமல்லபுரம்:சூலேரிக்காடு குடிநீர் உற்பத்தி ஆலை துவக்க விழா கல்வெட்டு பலகைக்கு, சுதை சிற்பத்தில் அலங்கார துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை குடிநீர் வாரியத்தின்கீழ், முதல் பிரிவு கடல்நீரில் குடிநீராக்கும் ஆலை, மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடில் இயங்குகிறது.
இதில், மற்றொரு புதிய ஆலை, 1,516 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்., 24ம் தேதி, புதிய ஆலையை திறந்து, குடிநீர் உற்பத்தியை துவக்கி வைத்தார்.
அன்றைய திறப்பு விழாவின் போது வைக்கப்பட்ட்ட கல்வெட்டிற்கு, தற்போது சுதை சிற்பங்கள் அடங்கிய அலங்கார துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டின்கீழ், ஆலையின் பறவை பார்வை தோற்ற வரைபடமும் இடம்பெற்றுள்ளது.