/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன் மகசூல் மதிப்பீடு வழங்காததால் ஏரிகளை ஏலம் விடுவதில் தாமதம்
/
மீன் மகசூல் மதிப்பீடு வழங்காததால் ஏரிகளை ஏலம் விடுவதில் தாமதம்
மீன் மகசூல் மதிப்பீடு வழங்காததால் ஏரிகளை ஏலம் விடுவதில் தாமதம்
மீன் மகசூல் மதிப்பீடு வழங்காததால் ஏரிகளை ஏலம் விடுவதில் தாமதம்
ADDED : மார் 28, 2024 10:08 PM
மதுராந்தகம்:மதுராந்தகம், செய்யூர் வட்டத்தில் கிளியாறுவடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில், 261ஏரிகள் உள்ளன.
அதில், 255 ஏரிகளுக்கு, கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து, 2024 ஜூன் 30 வரை பசலி ஆண்டாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தற்போது, நடைபெறும் பசலி ஆண்டு மற்றும் எதிர்வரும் இரண்டு பசலி ஆண்டுகளுக்கு சேர்த்து, மூன்றாண்டுகளுக்கு மொத்தமாக ஏலம் விட வசதியாக, மீன்மகசூல் மதிப்பீட்டை மொத்தமாக வழங்க, மீன்வளத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதியின் பரப்பளவு மற்றும் கொள்ளளவு அடிப்படையில், 8 மாத காலத்திற்குள் ஏரியின் நீர் இருப்பு, படிப்படியாக சரிந்து வற்றிவிடும்.
இதை கணக்கில் கொண்டு, மூன்று பசலி ஆண்டுகளுக்கு மீன்மகசூல் மதிப்பீடு வழங்குமாறு, மதுராந்தகம்கிளியாறு வடிநிலை உப கோட்டத்தின் சார்பாக, காஞ்சிபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், மீன் மகசூல்மதிப்பீடு, தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளதால், மீன் குத்தகை ஏலம் விடுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலம் துவங்கி உள்ளதால், ஏரிகளில் நீர் வற்றும் முன், விரைந்து ஏரிகளை ஏலம் விடநடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்திவருகின்றனர்.

