sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிய பணியிடங்கள் உருவாவதில் தாமதம்... ஏன்?மாமல்லபுரம் நகராட்சியில் பணிகள் பாதிப்பு

/

புதிய பணியிடங்கள் உருவாவதில் தாமதம்... ஏன்?மாமல்லபுரம் நகராட்சியில் பணிகள் பாதிப்பு

புதிய பணியிடங்கள் உருவாவதில் தாமதம்... ஏன்?மாமல்லபுரம் நகராட்சியில் பணிகள் பாதிப்பு

புதிய பணியிடங்கள் உருவாவதில் தாமதம்... ஏன்?மாமல்லபுரம் நகராட்சியில் பணிகள் பாதிப்பு


ADDED : பிப் 22, 2025 11:05 PM

Google News

ADDED : பிப் 22, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாமல்லபுரம் நகராட்சியில், ஆணையாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஆவதால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களில், மாமல்லபுரம் பேரூராட்சி முக்கியமானது. இப்பகுதியில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள், உள்நாடு, சர்வதேச பயணியரை கவர்ந்து, சுற்றுலாவிற்கு குவிகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இவ்வூர் சிறிய கிராமம். மக்கள்தொகையும் குறைவு. சுற்றுலா பயணியர் குறைவு.

மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி, நாளடைவில் பயணியர் அதிகரித்தனர். ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை, இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த கருதி, கடந்த 1964ல், நகரிய நிர்வாகமாக நிர்வகித்தது.

சுற்றுலா வளர்ச்சியடைந்த சூழலில், சுற்றுலாவை சார்ந்து, விடுதிகள், சிற்பக்கூடங்கள், கைவினைப்பொருட்கள் விற்பனை கடைகள், பிற தொழில்கள் ஆகியவை பெருகின. சுயதொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக, பிற மாவட்ட பகுதியினர் அதிகளவில் குடியேறினர். வசிப்பிட பகுதிகள், மேலும் விரிவடைந்தன.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, கடந்த 1994ல், இவ்வூரை பேரூராட்சி - சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தியது.

இதற்கிடையே, தமிழக அரசு, பேரூராட்சி நிர்வாகங்களை, சிறப்பு ஊராட்சியாக, கடந்த 2004ல் மாற்றியது. பின் கடந்த 2005ல் அரசின் உத்தரவில், அவை மீண்டும் பேரூராட்சியாக மாற்றப்பட்டு, மாமல்லபுரமும் பேரூராட்சியாக செயல்பட்டது.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங், கடந்த 2019ல் இங்கு சந்தித்தது, 2022ல், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது.

கடந்த ஆண்டு 'ஜி - 20' நாடுகள் மாநாடுகளில், இங்கு சில நடத்தப்பட்டது என, இவ்வூர் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.

சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ள இப்பகுதியை, நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, கடந்த ஆண்டு முடிவெடுத்து, மூன்றாண்டு சராசரி வருமானம் உள்ளிட்ட விபரங்களை, அத்துறை பெற்றது. நகராட்சி எனில், மக்கள் 30,000க்கும் கூடுதலாக வசிக்க வேண்டும்.

இங்கு 20,000க்கும் குறைவானவர்களே வசிப்பதால், சுற்றுலா முக்கியத்துவம் கருதி, நகராட்சியாக தரம் உயர்த்த முடிவெடுத்தது. இதுகுறித்து, மன்ற தீர்மான ஒப்புதல் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டில் நகராட்சியாக தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதி பரப்பு, 12.568 ச.கி.மீ.,. மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 15,000 பேர். தற்போது, 20,000 பேராக அதிகரித்துள்ளனர். வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில் பயணியர் திரள்கின்றனர்.

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு, வடகடம்பாடி ஊராட்சி பெருமாளேரி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை ஆகிய ஊராட்சிகள், ஊரக உள்ளாட்சி வார்டு வரையறைக்கு முன், மாமல்லபுரம் நகராட்சியுடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பணியிடங்கள் என்ன?

பொது பிரிவு


ஆணையர், மேலாளர் - 1, கணக்கர் - 1, வருவாய் ஆய்வாளர் - 1, உதவியாளர் - 1, இளநிலை உதவியாளர் - 5, தட்டச்சர் - 1 வருவாய் உதவியாளர் - 3, பதிவறை எழுத்தர் - 1, அலுவலக உதவியாளர் - 3

பொறியியல் பிரிவு


நகராட்சி பொறியாளர் - 1, பொதுப்பணி மேற்பார்வையாளர் - 1, படவரைவாளர் - 1, பணி ஆய்வாளர் - 2, மின் பணியாளர் - 1, குழாய் பொருத்துநர் - 1

நகரமைப்பு பிரிவு


நகரமைப்பு ஆய்வாளர் - 1

பொதுசுகாதார பிரிவு


துப்புரவு ஆய்வாளர் - 1, துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் - 4, களப்பணி உதவியாளர் - 1






      Dinamalar
      Follow us