/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம்?
/
வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம்?
வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம்?
வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம்?
ADDED : ஏப் 20, 2024 12:39 AM
சேலையூர்:சேலையூரை அடுத்துள்ளது, வேங்கைவாசல் ஊராட்சி. இது, தென்சென்னை லோக்சபா தொகுதியில் அடங்கியது. இவ்வூராட்சிக்குட்பட்ட, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த முறை இதே மையத்தில் ஓட்டளித்த வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் நேற்று ஓட்டளிக்க சென்றனர்.
அப்போது, 30க்கும் மேற்பட்டோர் பட்டியலில் பெயர் இல்லாததால் திரும்பி சென்றனர்.
இது தொடர்பாக, தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம், கடந்த முறை ஓட்டு போட்டவர்களின் பெயர், இம்முறை இல்லாததை கவனத்தில் கொள்ள வேண்டும் என, அப்பகுதி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதம்பாக்கத்திலும் தவிப்பு
சென்னை, ஆதம்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குட்டியம்மாள், 40. 'ஓட்டு லிஸ்ட்டில் இவரது பெயர் இல்லை' என, பாக முகவர் தெரிவித்தார்.
'கடந்த முறை ஓட்டுப்போட்டேன்; இம்முறை எப்படி பெயர் விடுபட்டது; தேர்தல் கமிஷன் சரியான முறையில் எங்களுக்கு வழிகாட்டவில்லை' என, விரக்தியில் சென்றார்.
அதேபோல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, 61.இவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், கடந்த தேர்தலில் ஓட்டு போட்டும், இந்த முறை அவரின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதையடுத்து, அவர் பாக முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

