நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைந்து, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், குறுவட்ட அளவராக தரம் உயர்த்த, நிதித்துறை செயலருக்கு பரிந்துரைக்கப்பட்ட கோப்பின் மீது விரைந்து ஒப்புதல் வழங்கக்கோரி, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட நில அளவையர்கள் பங்கேற்றனர்.