/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை மோசம் சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
சாலை மோசம் சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2024 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனகாபுத்துார்:பல்லாவரம் - குன்றத்துார் சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக பள்ளம், மேடாக உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மேலும், அனகாபுத்துார், பம்மல் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில், தெருவெங்கும் பள்ளத்தை தோண்டி, புதைகுழியாக்கி விட்டனர்.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், அனகாபுத்துாரில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சாலையை சீரமைக்க கோஷம் எழுப்பினர்.