/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னகேசவ பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
சென்னகேசவ பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
சென்னகேசவ பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
சென்னகேசவ பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 08, 2024 12:29 AM

செய்யூர்:செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தில் பழமையான சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
கொடி மரத்துடன் கூடிய கோவிலில் ஒரு முக்கிய பிரகாரம் உள்ளது. இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாக ஏலம் விடப்பட்டு உள்ளது. தற்போது ஒரு கால பூஜை நடந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் கட்டடம் சிதிலமடைந்து உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்பட்டு, பெருமாள் வீதியுலா செல்வது வழக்கத்தில் இருந்து வந்தது. மார்கழி, புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தற்போது போதிய பராமரிப்பின்றி கோவில் சீரழிந்து வருகிறது.
எனவே, பழமை மாறாமல் கோவிலை புனரமைத்து, தினமும் பூஜைகள் நடத்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.