/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினத்தில் வெள்ள பாதிப்பை தவிர்க்க உபரிநீர் கால்வாய் துார்வாரி பராமரிப்பு

ADDED : ஜூலை 31, 2024 11:44 PM

புதுப்பட்டினம்,: புதுப்பட்டினம் ஊராட்சி, அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியத்துடன் ஒருங்கிணைந்துள்ளது. நகரிய பகுதியில் அணுசக்தி துறையினரும், புதுப்பட்டினத்தில் மற்றவர்களும் வசிக்கின்றனர்.
நகரிய பகுதி தவிர்த்து, புதுப்பட்டினம் வசிப்பிடப் பகுதிகளில், ஆண்டுதோறும் மழைவெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இங்குள்ள ஆர்.எம்.ஐ., நகர், பல்லவன் நகர், ராஜா நகர், ஹூஸ்டர் நகர், தாவீது நகர், சதாம் உசேன் நகர், ஹாஜியார் நகர் உள்ளிட்ட வசிப்பிட பகுதிகளில், ஆண்டுதோறும் மழைவெள்ளம் சூழ்கிறது.
புதுப்பட்டினம், வசுவ சமுத்திரம் சுற்றுப்புற பகுதி ஏரிகளின் உபரிநீர், இப்பகுதியில் கடக்கும் பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, கடலில் கலக்கிறது. கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தும், தொடர்ந்து பராமரிக்கப்படாததால் துார்ந்தது.
புதர்செடிகள் படர்ந்து, தண்ணீர் செல்ல இயலாமல், வசிப்பிட பகுதிகளை சூழ்கிறது. இப்பகுதிகள் மிக தாழ்வாக உள்ளதால், மிதமான மழைக்கே வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சில மாதங்களில் வடகிழக்கு பருவ கால கனமழை பெய்யும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போதே கால்வாயை துார்வாரிபராமரிக்க, ஊராட்சித் தலைவர் காயத்ரி, பொதுப்பணித் துறையினரிடம் வலியுறுத்தினார்.
அதையடுத்து, அத்துறையினர் 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, கால்வாயில் புதர் அகற்றி, துார்வாரி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.