/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி தின்னலுார்வாசிகள் மனு
/
புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி தின்னலுார்வாசிகள் மனு
புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி தின்னலுார்வாசிகள் மனு
புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி தின்னலுார்வாசிகள் மனு
ADDED : ஆக 09, 2024 01:54 AM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தின்னலுார் ஊராட்சி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அட்டை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், இங்கு மூன்று குளங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வரப்பெற்றுள்ளது.
தின்னலுார் கிராமத்தில், மேய்க்கால் புறம்போக்கு சர்வே எண்: 299, 393, 394, 395, 398, 401, 404, 406 ஆகிய இடங்கள் அனைத்தும், தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால், 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள, ஆக்கிரமிப்பாளர்கள் தடை செய்கின்றனர். இதன் காரணமாக, 100 நாள் வேலை செய்ய முடியாமல், பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மதுராந்தகம் வட்டாட்சியர் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதிவாசிகள் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நேற்று, ஆக்கிரமிப்பில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு பகுதியினை அளவீடு செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜை சந்தித்து, தின்னலுார் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, மதுராந்தகம் வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.