/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் குப்பை குவிப்பு ஊராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி
/
ஊரப்பாக்கத்தில் குப்பை குவிப்பு ஊராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி
ஊரப்பாக்கத்தில் குப்பை குவிப்பு ஊராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி
ஊரப்பாக்கத்தில் குப்பை குவிப்பு ஊராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி
ADDED : பிப் 22, 2025 12:51 AM

ஊரப்பாக்கம், ஊரப்பாக்கம் ஊராட்சி முழுதும் குப்பை தேங்கி, பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊரப்பாக்கம் ஊராட்சி. இங்கு 14 சிற்றுார்கள் உள்ளன. கடந்த 2021ல் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த பவானி, ஊராட்சி தலைவரானார்.
பின், ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, வார்டு உறுப்பினர்கள் அளித்த புகாரின்படி, பவானியின் அதிகாரம் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக, ஊராட்சி நிர்வாகம் முறையாக இயங்கவில்லை என்றும், அனைத்து தெருக்களிலும் குப்பை முறையாக சேகரிக்கப்படாமல், தெருக்கள் மற்றும் சாலைகளில் குவிந்து கிடப்பதாகவும் பகுதிவாசிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஊரப்பாக்கத்தின் பிரதான சாலையாக காரணை புதுச்சேரி சாலை உள்ளது. இந்த வழியாகவே கீரப்பாக்கம், காரணை புதுச்சேரி, குமுளி, கண்டிகை, ஊனமாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் இரு புறமும், குப்பை மலைபோல் தேங்கி கிடக்கிறது. பிளாஸ்டிக் பைகளில் கலந்து உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மூக்கை பொத்தியபடி பயணிக்கின்றனர். பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
தவிர, குப்பையில் உள்ள உணவுக் கழிவுகளை உண்ண வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்குகின்றனர். எனவே, ஊரப்பாக்கத்தில் குவியும் குப்பையை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.