/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்
/
மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்
ADDED : ஜூலை 05, 2024 08:32 PM
திருப்போரூர்:திருப்போரூர் வட்டாரத்தில் செம்பாக்கம் வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் மானாமதி துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில், நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாக, வட்டார வேளாண் உதவிஇயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடப்பு சம்பா பருவத்திற்கு, விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. விதை நெல், போதுமான அளவில் இருப்பு உள்ளது.
இதில், பி.பி.டி., -5204 - சி ரகம் 9,250 கிலோவும், கோ 55 - சி1 ரகம் 1,300 கிலோவும், கோ 51 - சி ரகம் 6,700 கிலோவும், வெள்ளை பொன்னி 5,250 கிலோவும், எம்.டி.யு., 1010 ரகம் 4,000 கிலோவும், திருச்சி - -4 ரகம் 1,250 கிலோவும் இருப்பில் உள்ளன.
அதேபோல், பாரம்பரிய நெல் ரகங்களான கருங்குறுவை 50 கிலோ, சிவன் சம்பா 30 கிலோ, மாப்பிள்ளை சம்பா 50 கிலோ ஆகிய ரகங்கள் இருப்பில் உள்ளன.
விவசாயிகள் அனைவரும், விதை நெல் ரகங்களை மானிய விலையில் பெற்று பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.