/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' ஆவடி ஏர் போர்ஸ் அபாரம்
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' ஆவடி ஏர் போர்ஸ் அபாரம்
ADDED : ஜூன் 09, 2024 02:20 AM
சென்னை:டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஆவடி ஏர் போர்ஸ் ஸ்டேஷன் அணி, 113 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை பெட்ரோலியம் அணியை தோற்கடித்தது.
திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவள்ளூரில் நடக்கின்றன.
மூன்றாவது டிவிஷன் போட்டியில், ஆவடி ஏர் போர்ஸ் ஸ்டேஷன் மற்றும் சென்னை பெட்ரோலியம் அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த ஏர் போர்ஸ் ஸ்டேஷன் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 29.2 ஓவர்களில் 'ஆல் - அவுட்' ஆகி, 207 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த சென்னை பெட்ரோலியம் அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 94 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதனால், 113 ரன்கள் வித்தியாசத்தில் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், முதலில் களமிறங்கிய ஆவடி ஓ.சி.எப்., அணி, 30 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 211 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த, இந்தியா - ஜப்பான் லைட்டிங் அணி, 26.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.