sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டிவிஷன் ஹாக்கி 'லீக்' துவக்கம் ஹால்ஸ், பால்ஸ் கிளப் வெற்றி

/

டிவிஷன் ஹாக்கி 'லீக்' துவக்கம் ஹால்ஸ், பால்ஸ் கிளப் வெற்றி

டிவிஷன் ஹாக்கி 'லீக்' துவக்கம் ஹால்ஸ், பால்ஸ் கிளப் வெற்றி

டிவிஷன் ஹாக்கி 'லீக்' துவக்கம் ஹால்ஸ், பால்ஸ் கிளப் வெற்றி


ADDED : பிப் 22, 2025 11:54 PM

Google News

ADDED : பிப் 22, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், நேற்று போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துவங்கின.

வேளச்சேரி கிளப், எம்.சி.சி., - அடையார் யங்கஸ்ட், இந்திரா காந்தி உள்ளிட்ட 33 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் எட்டு குழுக்களாக பிரிந்து, லீக் முறையில் மோதுகின்றன. போட்டியை, ஒலிம்பியன் திருமாவளவன், சங்கச் செயலர் உதயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நேற்று காலை 6:30 மணிக்கு நடந்த முதல் போட்டியில், ஹால்ஸ் கிளப் அணி, 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில், ஜெய்ஹிந்த் கிளப்பை வீழ்த்தியது. தொடர்ந்து, 7:30 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில், பிரண்ட்ஸ் கிளப் - பால்ஸ் கிளப் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், பால்ஸ் கிளப் அணி, 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதே போல், 8:30 மணிக்கு மோதிய திருமால் அகாடமி அணி, 4 - 1 என்ற புள்ளிக்கணக்கில், சேப்பாக்கம் யங்கஸ்ட் அணியை தோற்கடித்தது. இன்றைய லீக் ஆட்டங்களில், ஆர்.வி., அகாடமி - செயின்ட் ஜார்ஜ்; மெட்ராஸ் நேஷனல் கிளப் - திவாகர் மெமோரியல்; செயின்ட் பால்ஸ் - ஸ்டார் ஆப் மேக்கிஸ் அணிகள் மோதுகின்றன.






      Dinamalar
      Follow us