/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க.,வினர் ஒழிக கோஷம் பா.ஜ.,வினர் கொதிப்பு
/
தி.மு.க.,வினர் ஒழிக கோஷம் பா.ஜ.,வினர் கொதிப்பு
ADDED : செப் 01, 2024 01:19 AM
தாம்பரம்:எழும்பூர் -- நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று துவங்கியது.
தாம்பரம் ரயில் நிலையத்தில், இந்த ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையில், 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.
அதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில், 500க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரும் கலந்து கொண்டனர்.
தாம்பரத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்த போது, தி.மு.க.,வினர் மற்றும் பா.ஜ., வினர் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி ரயிலை வரவேற்றனர். அப்போது, பா.ஜ.,வினர், 'மோடி வாழ்க' என கோஷங்கள் எழுப்பினர். அதற்கு பதிலடியாக தி.மு.க.,வினர், 'மோடி ஒழிக' என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயிலில் பா.ஜ.,வை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி வந்தார். ஒழிக கோஷங்களால் அவர் ஆவேசம் அடைந்தார்.
பா.ஜ.,வினர் மத்தியில் பேசிய அவர், ''தி.மு.க., வினருக்கு நாகரிகம் தெரியாததால் தான், மோடி ஒழிக என கோஷம் எழுப்பினர்.
''தமிழகத்திற்கு, மோடி பல்வேறு நல்ல திட்டங்களை கொடுத்தள்ளார். இப்போது, இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடுத்துள்ளார்,'' என்றார்.