/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் குடிநீர் மையம் அமைப்பு
/
மாமல்லையில் குடிநீர் மையம் அமைப்பு
ADDED : மார் 05, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில் மற்றும் அதன் முன்புறம் பஸ் நிலையம் என உள்ளன. கோவிலில் வழிபட பக்தர்கள் வருகின்றனர்.
பயணியர் பஸ் நிலையத்தில் பஸ்சிற்கு காத்திருக்கின்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை. குடிநீருக்காக பிற இடங்களுக்கு சென்று அவதிப்படுகின்றனர்.
வசதியானவர்கள், கடைகளில் பாட்டில் குடிநீர் வாங்கி, தாகம் தணிக்கின்றனர். ஏழைகள் குடிநீருக்காக சுற்றுப்புற பகுதிக்கு சென்று அலைகின்றனர்.
பக்தர்கள், பயணியர் ஆகியோர் குடிநீர் தேவை கருதி, நன்கொடையாளர் வாயிலாக, கோவில் தேரடி பகுதியில், தற்போது சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.