/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூன்று மண்டலங்களில் குடிநீர் 'கட்'
/
மூன்று மண்டலங்களில் குடிநீர் 'கட்'
ADDED : ஏப் 29, 2024 03:55 AM
சென்னை, : நெம்மேலி -1 கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து வினியோகிக்கப்படும் குடிநீர், நாளை 30ம் தேதி காலை 9:00 முதல், மே 1ம் தேதி காலை 9:00 மணி வரை நிறுத்தம் செய்யப்படும்.
இதன் காரணமாக, அடையாறு மண்டலத்தில் திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
மேலும், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

